
பெண்களிடையே நீண்ட கால சேமிப்பை ஊக்குவிப்பதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களின் தொகுதி. இவை, பெண்கள் தொழில்முயற்சிகளை மேற்கொள்வதற்கும், சிறப்பான நிதிசார் சுதந்திரத்தை அடைவதற்கும் உதவுவதன் மூலம் பெண்களை ஊக்குவிக்கின்றன.
இத்திட்டத்தை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள், வங்கியின் KYC மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாக ஆரம்பிக்க முடியும்.
ஆம். அனைத்து கணக்கு உரிமையாளர்களும் பெண்களாக இருந்தால் மாத்திரம் கூட்டுக் கணக்குகள் அனுமதிக்கப்படும்.
இல்லை. இத்திட்டத்தில் ஆண் வாடிக்கையாளர்களை கணக்கு உரிமையாளர்களாக சேர்க்க முடியாது. அனைத்து கணக்கு உரிமையாளர்களும் கட்டாயம் பெண்களாக இருத்தல் வேண்டும்.
ஆம், கணக்கு உரிமையாளர்கள் அனைவரும் தகுதி அளவுகோல்களான, பெண்களாக இருப்பதோடு, மாற்றத்தின்போது நடைமுறையில் உள்ள திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்தால் மாற்ற முடியும்.
ஆண் வாடிக்கையாளர் ஒருவர் சேர்க்கப்பட்டால், இந்த கணக்கு பெண்களுக்கான திட்டத்தின் நலன்களை பெற்றுக்கொள்ள தகுதிபெறாது என்பதோடு, வழமையான சேமிப்புக் கணக்கொன்றாக மாற்றப்படலாம்.
வாடிக்கையாளர்கள் ஜனசக்தி பைனான்ஸ் கோரும் KYC ஆவணங்களை, அடையாளம் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தும் சான்றுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
இல்லை. இந்த திட்டம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாத்திரமே.
ஆம், ஜனசக்தி பைனான்ஸின் முதிர்வுக் காலத்திற்கு முந்திய மீளப்பெறல் கொள்கைக்கு அமைவாக, முன்கூட்டிய மீளப்பெறல்கள் அனுமதிக்கப்படும்.
ஆம், ஜனசக்தி பைனான்ஸ் இனது கடன் வழங்கல் கொள்கைகளின் அடிப்படையில் இந்த வைப்பானது பிணையமாக பயன்படுத்தப்படலாம்.