XG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, இலங்கையின் வங்கி சாரா நிதித்துறையில் நெறிமுறை சார்ந்த முதலீட்டை மறுவரையறை செய்யும் வகையில் ஷரியா அடிப்படையிலான நிதித்தீர்வுகளை வழங்குகின்றது. இது பொறுப்பான, ESG இணக்கமான மற்றும் நம்பிக்கை சார்ந்த முதலீடுகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் தெரிவுகள் தொடர்ந்து மாறி வரும் சூழலில், மாற்று நிதித்துறையில் வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஆராய நிறுவனம் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
2021 இல் ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரத்தியேக வணிகப் பிரிவாக, மாற்று நிதி வணிகப் பிரிவு (Alternative Finance Business Unit – AFBU) என்ற பெயரில் தொடங்கப்பட்ட AFBU, இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின் கீழ் செயல்பදின்றது. இது ஷரியா கொள்கைகளுக்கு அமைவான நிதித் தீர்வுகளை வழங்குகிறது. இப் பிரிவின் நோக்கம் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, சமூகங்களின் பல்வேறு தரப்பினருக்கும் வணிகங்களுக்கும் மதிப்புமிக்க நிதிச் சேவைகளை வழங்குவதாகும்.
சுயாதீன ஷரியா ஆலோசகர்களின் வழிகாட்டுதலுடனும், இஸ்லாமிய நிதித்துறையில் அனுபவமிக்க நிபுணர்களின் ஆதரவுடனும் AFBU தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது. இப்பிரிவானது ஆழ்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கண்டிப்பான நிர்வாகத்துடன் இணைக்கின்றது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறை சார்ந்த முதலீட்டு முயற்சிகளில் பங்கேற்க உதவும் வக்காலா தவணை முதலீடுகள் (முகவர் அடிப்படையிலான நெறிமுறை முதலீட்டுக் கட்டமைப்புகள்) முதல் நடைமுறைக்கு உகந்ததாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்ட இஜாரா வாகன லீசிங் தெரிவுகள் (ஷரியாவுக்கு இணக்கமான லீசிங் தீர்வுகள்) வரையிலான தீர்வுகளை வழங்குகிறது. செயல்திறனையும் பொறுப்புணர்வையும் ஒருங்கிணைக்கும் நிதி அணுகுமுறைக்கு இத்தீர்வுகள் பிரதிபலிப்பாக அமைகின்றன.
“அனைத்து இலங்கை முதலீட்டாளர்களுக்கும் நெறிமுறை சார்ந்த ஷரியாவுக்கு இணக்கமான நிதித் தீர்வுகளை அணுகக்கூடியதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம்.” என்று ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கூறினார். “நிதி வருமானத்துடன் ESG சார்ந்த பொறுப்புணர்வையும் கருத்தில் கொள்ளும் முதலீட்டாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், இத் துறையில் வலுவான வளர்ச்சி வாய்ப்புகளை நாம் காண்கிறோம். நிதிப் பெறுமதியையும் நெறிமுறை நம்பகத்தன்மையையும் ஒருங்கிணைக்கும் தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என்று குறிப்பிட்டார்.
நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், AFBU தனது செயல்முறைகளில் கண்காணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. காலாண்டு ஒப்பந்த மதிப்பாய்வுகள், நிகழ்நேர நிதிக் கண்காணிப்பு மற்றும் வழக்கமான கள விஜயங்கள் ஆகியன ஒவ்வொரு முதலீடும் ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட நெறிமுறைத் தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்கின்றன. இந்த அணுகுமுறை, நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு வளர்ந்து வரும் மாற்று நிதிச் சூழலில் ஜனசக்தி பைனான்ஸை ஒரு நம்பகமான நிறுவனமாக நிலைநிறுத்துகிறது.
“எங்கள் சேவைகளை வடிவமைக்கும்போது, நாங்கள் சேவைத் தொகுப்பை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கையாளுகிறோம். நெகிழ்வுத்தன்மையையும் நெறிமுறைக் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பையும் பேணி, முதலீட்டாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்கிறோம்.” என்று ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் வழிமுறைகளின் (channels) பிரிவுத் தலைவர் சமிந்த ரத்நாயக்க கூறினார். “நெறிமுறை மற்றும் ESG சார்ந்த முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இத் தீர்வுகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதிலும் அவை நடைமுறைக்கு ஏற்றவையாகவும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுடன் இணங்கியவையாக அமைவதையும் உறுதி செய்வதில் எங்கள் கவனம் உள்ளது.” என்றார்.
AFBU இன் தொடர்ச்சியான வளர்ச்சி வேகம், நெறிமுறை சார்ந்த மற்றும் நிலைபேறான நிதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் பரந்த சர்வதேச மற்றும் உள்ளூர் போக்குகளைப் பிரதிபலிக்கிறது. இஸ்லாமிய நிதித்துறையில் உருவாகியுள்ள அனுபவமும் தெளிவான வளர்ச்சி நோக்கமும் மாற்று நிதித் துறையில் ஜனசக்தி பைனான்ஸின் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது. அதன் மூலம் பொறுப்பான முதலீட்டை ஆதரிப்பதோடு எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் தளத்தையும் உருவாக்கியுள்ளது.
தனது துறைசார் நிபுணத்துவம், வலுவான நிர்வாக நடைமுறைகள் மற்றும் ESG கொள்கைகளுடனான தெளிவான இணக்கம் ஆகியவற்றின் ஊடாக ஜனசக்தி பைனான்ஸின் AFBU, இலங்கையில் நெறிமுறையான முதலீட்டிற்கான தர அளவுகோலைத் தொடர்ந்து அமைத்து வருகிறது. அதேவேளை, நாட்டில் பொறுப்புணர்வு சார்ந்த மாற்று நிதித் துறையின் வளர்ச்சியில் முன்னணி பங்காற்றும் நோக்கத்துடன் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அடித்தளத்தையும் கட்டமைக்கிறது.
முற்றும்.
ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது)
ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச்சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித்தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.

சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் – பிரதம நிறைவேற்று அதிகாரி – ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி

சமிந்த ரத்நாயக்க – வழிமுறைகளின் தலைவர் – ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி
