சக்தி - அவளது நாளைய நாளுக்கு வலுவூட்டுகிறது

service_content_background_image

சக்தி என்றால் என்ன?

பெண்களிடையே நீண்ட கால சேமிப்பை ஊக்குவிப்பதற்காக விசேடமாக  வடிவமைக்கப்பட்ட திட்டங்களின் தொகுதி. இவை, பெண்கள் தொழில்முயற்சிகளை மேற்கொள்வதற்கும், சிறப்பான நிதிசார் சுதந்திரத்தை அடைவதற்கும் உதவுவதன் மூலம் பெண்களை ஊக்குவிக்கின்றன.

 

சக்தி நிலையான வைப்பின் நலன்கள்

  • நிலையான வைப்பினது காலம் 2 வருடங்களுக்கு அதிகமாக இருப்பின்: வழமையான நிலையான வைப்பு வட்டி வீதத்தை விடவும் மேலதிகமாக 0.25% வழங்கப்படும்.
  • நிலையான வைப்பினது காலம் 2 வருடங்களுக்கு அதிகமாக இருப்பின்: சிரேஷ்ட பிரஜைகளுக்கு, இலங்கை மத்திய வங்கியால் (CBSL) அனுமதிக்கப்பட்ட உச்ச வட்டி வீதத்திற்கு அமைவாக, வழமையான நிலையான வைப்பு வட்டி வீதத்தை விட மேலதிகமாக 0.75% வழங்கப்படும்.
  • சக்தி வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் பெண்கள், ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி இடமிருந்து லீசிங் வசதிகள், தங்கக் கடன்கள் மற்றும் ஏனைய நிதிச்சேவைகளுக்கு விண்ணப்பிக்கும்போது விசேட சலுகை வட்டி வீதங்களைப் பெறுவர்.

தகுதி அளவுகோல்கள்

  • இத்திட்டம் பெண் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
  • விண்ணப்பதாரிகள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்
  • பெண் ஒருவரின் பெயரிலேயே கணக்கு / வைப்பு ஆரம்பிக்கப்படல் வேண்டும்
  • அனைத்து கணக்கு உரிமையாளர்களும் பெண்களாக இருந்தால் மாத்திரமே கூட்டுக் கணக்குகள் அனுமதிக்கப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த கணக்கை ஆரம்பிக்க தகுதி பெறுவோர் யார்?

இத்திட்டத்தை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள், வங்கியின் KYC மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாக ஆரம்பிக்க முடியும்.

இத்திட்டத்தில் கூட்டுக் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியுமா?

ஆம். அனைத்து கணக்கு உரிமையாளர்களும் பெண்களாக இருந்தால் மாத்திரம் கூட்டுக் கணக்குகள் அனுமதிக்கப்படும்.

கூட்டுக் கணக்கு உரிமையாளர் ஒருவராக ஆண் வாடிக்கையாளர் ஒருவரை சேர்க்க முடியுமா?

இல்லை. இத்திட்டத்தில் ஆண் வாடிக்கையாளர்களை கணக்கு உரிமையாளர்களாக சேர்க்க முடியாது. அனைத்து கணக்கு உரிமையாளர்களும் கட்டாயம் பெண்களாக இருத்தல் வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் வைப்பொன்றை இந்தத் திட்டத்திற்கு மாற்ற முடியுமா?

ஆம், கணக்கு உரிமையாளர்கள் அனைவரும் தகுதி அளவுகோல்களான, பெண்களாக இருப்பதோடு, மாற்றத்தின்போது நடைமுறையில் உள்ள திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்தால் மாற்ற முடியும்.

ஆண் வாடிக்கையாளர் ஒருவர் கணக்கில் பின்னர் சேர்க்கப்பட்டால் என்ன நடக்கும்?

ஆண் வாடிக்கையாளர் ஒருவர் சேர்க்கப்பட்டால், இந்த கணக்கு பெண்களுக்கான திட்டத்தின் நலன்களை பெற்றுக்கொள்ள தகுதிபெறாது என்பதோடு, வழமையான சேமிப்புக் கணக்கொன்றாக மாற்றப்படலாம்.

இந்த திட்டத்தை ஆரம்பிக்கத் தேவையான ஆவணங்கள் எவை?

வாடிக்கையாளர்கள் ஜனசக்தி பைனான்ஸ் கோரும் KYC ஆவணங்களை, அடையாளம் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தும் சான்றுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

இந்த வைப்புத்திட்டத்தை சிறுவர்கள் ஆரம்பிக்க முடியுமா?

இல்லை. இந்த திட்டம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாத்திரமே.

முதிர்வுக் காலத்திற்கு முன் பண மீளப்பெறல்களை மேற்கொள்ள முடியுமா?

ஆம், ஜனசக்தி பைனான்ஸின் முதிர்வுக் காலத்திற்கு முந்திய மீளப்பெறல் கொள்கைக்கு அமைவாக, முன்கூட்டிய மீளப்பெறல்கள் அனுமதிக்கப்படும்.

இந்த வைப்பினை கடன் ஒன்றுக்கான பிணையாக பயன்படுத்த முடியுமா?

ஆம், ஜனசக்தி பைனான்ஸ் இனது கடன் வழங்கல் கொள்கைகளின் அடிப்படையில் இந்த வைப்பானது பிணையமாக பயன்படுத்தப்படலாம்.

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image
    Skip to content