JXG (ஜனசக்தி குழுமம்) இன் உறுப்பினரான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, அதன் நுகேகொடை கிளையை இலக்கம். 136/5, S. De S. ஜயசிங்க மாவத்தையை என்னும் முகவரிக்கு இடம் மாற்றியுள்ளது. இவ் இடமாற்றம் வாடிக்கையாளர்களுக்கான சௌகரியத்தையும் சேவைச் சிறப்பையும் மேம்படுத்தும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றது. புதிய இடம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அணுகக்கூடியதும் நட்புறவானதுமான சூழலை வழங்குகிறது. கொழும்பின் பரபரப்பான நகர்ப்புறத்தில் அமைந்துள்ள இப் புதிய வளாகம், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அணுகல் மற்றும் வசதிகளை வழங்குவதால் நிறுவனத்தின் சேவைகளை மிகவும் வசதியான சூழலில் பெற்றுக் கொள்ளலாம்.
இக் கிளையானது வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், பெருநிறுவன மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவன நிதியுதவிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது. மேலும், தனிநபர் மற்றும் வணிகத் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தனிப்பயன் நிதிச் சேவைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.
திறப்பு விழாவில் கருத்துத் தெரிவித்த ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கஜேந்திரன், “எங்கள் கிளை இடங்களைத் தீர்மானிக்கும் போது வாடிக்கையாளர் வசதியும் அணுகலும் முக்கிய முன்னுரிமையாகும். நுகேகொடை செறிந்த மக்கள் தொகையைக் கொண்ட சுறுசுறுப்பான வணிக மையமாகும். இந்த இடமாற்றம் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் அதே வேளை சேவைத் தரத்தையும் உயர்த்த உதவுகிறது. சமூகத்தில் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் நிதி அபிலாஷைகளை நிறைவேற்ற உதவுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என்றார்.
“எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதி தீர்வுகளை வழங்குவதில் உறுதியாக உள்ளனர். நுகேகொடை குழு தொழில்முறை சேவை, வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான சேவை நேரத்தை உறுதி செய்யும். இதன் மூலம் தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் தங்கள் நிதி இலக்குகளை நம்பிக்கையுடன் அடையத் தேவையான ஆதரவைப் பெறுவார்கள்.” என ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் சேனல்களின் தலைவர் சமிந்த ரத்நாயக்க கூறினார்.
நாடெங்கிலும் விரிந்த கிளை வலைமைப்பைக் கொண்டுள்ள ஜனசக்தி பைனான்ஸ் இலங்கையுள் தனது இருப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதி தீர்வுகள் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்கு நிறுவனம் பங்களித்து வருகிறது.
முற்றும்.
ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியண்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது)
ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச் சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலைப் பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.
படம் 01

படம் 02

படம் 03

