
திரு. சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் அவர்கள், ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி இனது தலைமை நிறைவேற்று அதிகாரியாக கடமை ஆற்றுகிறார். இந்த நியமனத்திற்கு முன், அவர் தலைமை நடவடிக்கை அதிகாரியாக பொறுப்பு வகித்ததோடு, 2025 ஆகஸ்ட் மாதத்திலிருந்து நான்கு மாதங்கள் செயல் தலைமை நிறைவேற்று அதிகாரியாக நிறுவனத்தை வழிநடத்தினார். நிறுவனம் முக்கியமான மாற்றங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஸ்திரத்தன்மை, தொடர்ச்சி மற்றும் அவதானத்துடனான செயலாக்கம் என்பவற்றை அவர் உறுதி செய்தார்.
வங்கியியல் மற்றும் நிதிச்சேவை துறையில் கிட்டத்தட்ட 27 வருட அனுபவத்தைக் கொண்டுள்ள, திரு. ஸ்ரீ கணேந்திரன் முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களில் சிரேஷ்ட தலைமைப் பதவிகளை வகித்தவர் ஆவார். அவரது நிபுணத்துவமானது, ஆரம்பம் முதல் இறுதி வரையான முழுமையான வங்கி நடவடிக்கைகள், வாடிக்கையாளர் மற்றும் சிறிய நடுத்தர தொழில்முயற்சி பிரிவுகளில் கிளை வங்கியியல், செயற்பாட்டு இடர் முகாமைத்துவம், வணிக தொடர்ச்சி முகாமைத்துவம், வணிக ஒருங்கிணைப்பு, செயல்முறை மறுசீரமைப்பு, நடவடிக்கை விசேடத்துவம், விற்பனை நிர்வாகம், கடனட்டை நடவடிக்கைகள், தகவல் பாதுகாப்பு மற்றும் கொள்முதல் என பரந்துள்ளது.
அத்துடன் அவர் வர்த்தக நிதிச்சேவை, கருவூல நடவடிக்கைகள், கடன் நடவடிக்கைகள், ஒத்துழைப்பு சேவைகள், நிர்வாகம், வளாகங்கள் மற்றும் பௌதிக பாதுகாப்பு உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கை செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதில் ஒரு தசாப்தத்துக்கு கிட்டிய தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்டுள்ளதோடு, அவற்றினூடாக வலுவான நிர்வாகம், செயற்திறன்மிக்க கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கை மீள்தன்மை என்பவற்றிற்கும் வலு சேர்க்கிறார்.
திரு. ஸ்ரீ கணேந்திரன் அவர்களின் பரந்த நடவடிக்கைகள் சார்ந்த வெளிப்பாடு மற்றும் நேரடி தலைமைத்துவ அணுகுமுறையானது, சிக்கலான, பன்முக செயல்பாட்டு அணிகளை வழிநடத்துவதற்கும், மூலோபாய முன்னுரிமைகளை நோக்காகக் கொண்ட பாரியளவிலான நிறுவன ரீதியிலான உருமாற்ற முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அவருக்கு உதவியுள்ளது.
அவர் ஐக்கிய இராச்சியத்தின் முகாமைத்துவ கணக்காளர்கள் பட்டய நிறுவகத்தின் (CIMA) அங்கத்தவரும், அமெரிக்கன் சிட்டி பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுமானி (MBA) பட்டம் பெற்றவரும் ஆவார். மேலும் பத்திரங்கள் மற்றும் முதலீடு பட்டய நிறுவகத்தின் (CISI) இணை அங்கத்தவராக இருப்பதோடு, இலங்கை தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவராகவும் உள்ளார்.
திரு. ஸ்ரீ கணேந்திரன் அவர்களின் ஆழ்ந்த துறைசார் அனுபவம், உறுதியான நிர்வாக அவதானம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட தலைமைத்துவம் என்பன ஜனசக்தி பைனான்ஸின் மூலோபாய பயணத்தின் திசைக்கு வலு சேர்ப்பதோடு, நடவடிக்கை விசேடத்துவம், நிறுவன மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சி என்பவற்றிற்கும் பங்களிப்பதாக அமையும்.