திரு ராஜேந்திரா தியாகராஜா

emp-img
தலைவர்/நிர்வாகமற்ற இயக்குனர்

திரு. ராஜேந்திர தியாகராஜா அவர்கள், ஐக்கிய இராச்சியத்தின் முகாமைத்துவக் கணக்காளர்கள் பட்டய நிறுவகத்தின் அங்கத்தவராகவும், இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் அங்கத்தவராகவும் உள்ளார். மேலும், ஐக்கிய இராச்சியத்தின் Cranfield School of Business இனது வணிக நிர்வாக முதுமானி பட்டத்தையும் கொண்டுள்ளார்.

மூத்த வங்கியாளரான திரு. ராஜேந்திர தியாகராஜா அவர்கள், ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வங்கித்துறையில் மிகவும் வெற்றிகரமான ஒரு தொழில் வாழ்க்கையை முன்னெடுத்திருந்தார்.

தனது 37 ஆண்டு தொழில் வாழ்க்கையில், இலங்கையில் மூன்று அனுமதி பெற்ற வணிக வங்கிகளின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக கடந்த 16 ஆண்டுகளை இவர் கழித்துள்ளார். மேலும், வங்கிகளுக்கான கூட்டு நிறுவன நிர்வாகக் கட்டமைப்பு, Basel III நடைமுறைப்படுத்தல் மற்றும் வங்கிகளின் நியாயப் பெறுமதி கணக்கீடு, நிதிசார் உள்ளீர்ப்பு மற்றும் அண்மையில் வங்கிகளுக்கான Fintec Sand Box-framework உருவாக்கம் போன்றவற்றுக்கான கொள்கை முன்னெடுப்பு விடயங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் மேற்கொண்டுள்ளார். மேலும் இக் காலகட்டத்தில் அவர் இலங்கை வங்கிகள் சங்கம், ஆசிய வங்கிகள் சங்கம் மற்றும் இலங்கை நிதிச்சேவைகள் பணியகம் ஆகியவற்றின் தலைமைப் பதவிகளையும் வகித்துள்ளார்.

அத்துடன் அவர் லங்கா கிளியர் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை, அமெரிக்க வர்த்தக சபை, இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகம் என்பவற்றின் பணிப்பாளர் சபைகளில் அங்கத்துவம் வகித்ததோடு, இலங்கை வர்த்தக சபையின் தலைவராகவும் (2017-19) சேவையாற்றினார்.

அவர் தற்போது சியாம் சிட்டி, ஸ்ரீ லங்கா (பிரைவட்) லிமிடெட், ஸம்பியாவின் தொழில்முறை காப்புறுதிக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபைகளில் அங்கத்துவம் வகிப்பதோடு, பர்ஸ்ட் கெப்பிடல் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் தலைவர் மற்றும் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர், ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மற்றும், பேயபிள் பிரைவட் லிமிடட் ஆகியவற்றின் தலைவர் மற்றும் கலர்ஸ் ஒஃப் கரேஜ் லிமிட்டட் அறங்காவலர் சபைத் தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கிறார். 2016 இல், புற்றுநோய் சிகிச்சைக்கான விழிப்புணர்வு மற்றும் நிதி சேகரிப்பு பிரச்சார நடவடிக்கையின் ஓர் அங்கமாக இலங்கையின் குறுக்கே (பருத்தித்துறை முதல் தேவிந்திர முனை வரை) 674 கிலோமீட்டர் நடை பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்.

2022 இல், அவரது தன்னிகரற்ற பங்களிப்பிற்காக ஆசிய வங்கிகள் சங்கத்தின் “Chairman Emeritus” என்ற பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

திரு.தியாகராஜா அவர்கள் இலங்கையில் முன்னணி சிந்தனை அமைப்பான Pathfinder ஸ்தாபனத்தின் சிரேஷ்ட வருகைதரும் அங்கத்தவராகவும் உள்ளார். திரு. ராஜேந்திர தியாகராஜா 2022 ஏப்ரல் 27 முதல் நடைமுறைக்கு வருமாறு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image
    Skip to content