
JXG (ஜனசக்தி குரூப்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் என அறியப்பட்டதுமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, தனது புதிய கிளையை கல்முனையில் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் நிறுவனத்தின் மூலோபாய விரிவாக்கத் திட்டத்தினை பிரதிபலித்து, முக்கியமான மைல்கல்லாக இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது. நிறுவனத்தின் விரிவாக்கமடைந்து செல்லும் 38ஆவது கிளையாக அமைந்திருப்பதுடன், தேசத்தின் சகல சமூகத்தாருக்கும் உயர் தரம் வாய்ந்த நிதிச் சேவைகள் மற்றும் அணுகக்கூடிய வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஜனசக்தி பைனான்ஸ் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
முன்னோடியாக புத்தாக்கம், நிதிசார் உள்ளடக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அணுகல் போன்றவற்றினூடாக பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிறுவனத்தின் நோக்கத்தின் முக்கியமான படியாக இந்த மூலோபாய விரிவாக்கம் அமைந்துள்ளது. இல. 174, மட்டக்களப்பு வீதி, கல்முனை எனும் முகவரியில் புதிய கல்முனை கிளை அமைந்துள்ளதுடன், தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு பரந்தளவு நிதித் தீர்வுகளை வழங்கும். அவற்றில் கடன் வசதிகள், சேமிப்புகள் மற்றும் வைப்புகள், நுண்-நிதி, தங்கக் கடன்கள், இஸ்லாமிய நிதி மற்றும் டிஜிட்டல் வங்கியியல் வசதிகள் போன்றன அடங்கியுள்ளன.
வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வழிமுறைக்காக ஜனசக்தி பைனான்ஸ் நீண்டகாலமாக கௌரவிப்பைப் பெற்றுள்ளது. இந்த புதிய கிளையினூடாக, வசதி வாய்ப்புகள் குறைந்த சமூகங்களுக்கு நம்பிக்கையை வென்ற நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான தனது உறுதி மொழியை இந்தப் புதிய கிளை உறுதி செய்துள்ளது. கிழக்கு பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை மேம்படுத்தியுள்ளதனூடாக, நிதிசார் இடைவெளிகளை சீராக்கி, அவசியமான நிதித் தீர்வுகளுடன் பிரதேச சமூகங்களுக்கு வலுவூட்டி, அவர்களின் நிதிசார் நலனை மேம்படுத்தவும், நீண்ட கால அடிப்படையிலான வளர்ச்சியை கட்டியெழுப்பவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிராந்தியத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அணுகல் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை வழங்குவதாக கல்முனை கிளை அமைந்துள்ளது. அவர்களுக்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடன் இணைப்பை ஏற்படுத்தவும், தமது தனிப்பட்ட மற்றும் வியாபார இலக்குகளை எய்துவதற்கு அவசியமான ஆதரவை வழங்கவும் முன்வந்துள்ளது.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விரிவாக்கத்தினூடாக எமது 38ஆவது கிளை நிறுவப்பட்டுள்ளது. பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் எமது சென்றடைவை விரிவாக்கம் செய்வது போன்றவற்றில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த விரிவாக்கங்களினூடாக உள்ளுர் பிரதேசங்களின் சமூகத்தாரிடையே எமது பர்ந்த நிதிச் சேவைகளை கொண்டு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு அவசியமான ஆதரவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் சௌகரியமானதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
கல்முனைக்கு விரிவாக்கம் செய்துள்ளமை என்பது வியாபார தீர்மானம் மட்டுமன்றி, ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தின் நிதிசார் உள்ளடக்கத்துக்கு ஆதரவளிப்பது மற்றும் நம்பத்தகுந்த நிதிச் சேவைகளுக்கான அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்து பிராந்தியங்களை மேம்படுத்த உதவுவது போன்ற நோக்குகள் நிறைவேற்றப்படுகிறது. கிழக்கு மாகாணம் போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் பிரவேசிப்பதனூடாக, நிறுவனம், வாடிக்கையாளர் அணுகல், நிலைபேறான வளர்ச்சி மற்றும் கூட்டாண்மை வர்த்தக நாம கட்டியெழுப்பல் போன்ற தனது நீண்ட கால அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது.
வாடிக்கையாளர்களுடனான நிலைத்திருக்கும் உறவை கட்டியெழுப்புவது மற்றும் தனது சந்தை சென்றடைவை மேம்படுத்துவது போன்ற ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தின் பரந்த மூலோபாயத்துக்கு இந்த நகர்வு ஆதரவளிப்பதாகவும் அமைந்துள்ளது. வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவன (NBFI) துறையில், 44 வருட கால நம்பிக்கை மற்றும் தங்கியிருக்கும் திறன் போன்ற பாரம்பரியங்களுடன், ஜனசக்தி பைனான்ஸ் தொடர்ந்தும், ஆயிரக் கணக்கான இலங்கையர்களின் தங்கியிருக்கக்கூடிய நிதிசார் பங்காளராக சேவையாற்றுகிறது. கடந்த தசாப்த காலப்பகுதிகளில் சமூகங்களுக்கு சிறப்பாக இயங்கவும், நாடு முழுவதிலும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்பவும் நிறுவனம் முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது.
ஜனசக்தி பைனான்ஸ், நாடு முழுவதிலும் முக்கியமான பகுதிகளில் தனது பிரசன்னத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், உள்ளடக்கமான, புத்தாக்கமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிதித் தீர்வுகளை வழங்கி, தேசிய முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் தொடர்ந்தும் கவனம் செலுத்துகிறது.
ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது) ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித் தன்மை, வலிமை, தங்கியிருக்கும் திறன் மற்றும் நிபுணத்துவதும் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச் சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனமாகும். LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.
